Search This Blog

Sunday 18 March 2012

holy week liturgy

                 புனித வாரம்-வழிபாடுகள்         
                                                                                                  
                                                                                              சகோ.பாஸ்டின்
                                                                                       DATE: 18.3.12
குருத்து ஞாயிறு
 பொது முன்னுரை    
 இன்று குருத்து ஞாயிறைக் கொண்டாடுகிறோம். புனித வாரத்தின் தொடக்கமாகவும், நுழைவு வாயிலாகவும் குருத்து ஞாயிறு அமைகின்றது. தாவீதின் மகனுக்கு ஓசான்னா முழக்ககங்களோடும், ஒலிவ கிளைகளை கைகளிலே ஏந்திய வண்ணமாய் எபிரேயர் எருசலேமிற்குள் வீரப்பயணம் மேற்கொள்கிறார்கள். இந்தப் பயணம், தான் இயேசு இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும், மீட்பின் முதல் படியாகவும் அமைகிறது. ஈராயிரம் ஆண்டுகளாய் விடுதலைக்காய், வாழ்வின் விடியலுக்காய் ஏழை எளிய மக்களுக்கு நம்பிக்கையும், புத்துயிரையும் கொடுப்பதாகவும் அமைகிறது. அத்தகைய நாளை நினைவு கூறும் இன்று நாமும் குருத்தோலைகளை உயர்த்தி கொண்டு பவனியில் பங்கெடுக்க இருக்கிறன்றோம். பட்டங்களையும், பதவிகளையும் எதிர்பார்த்து இயேசுவின் பின் சென்றால் அவரின் பயணத்தில் நிச்சயம் நமக்கு இடமிருக்காது. இயேசுவைப்போல நாமும் தன்னலப் போர்வையை தகர்த்தும், ஆணவத்தை அழித்தும் இயேசுவின் பின் பயணிப்போம். அப்போது இப்புனித வாரம் நம்மை புனிதர்களாக நிச்சயம் மாற்றும் என்ற மனநிலையோடு இத்திருவழிபாட்டில் பங்கெடுப்போம். இத்திருப்பவனியின் வழியாக இயேசுவோடு கல்வாரிக்குப் பயணமாவோம்.

பவனிக்கு முன்னுரை

 இப்போது நாம் குருத்தோலை பவனியைத் தொடங்குகிறோம். பவனி என்றால் மக்கள் குதூகலமாக கூடி சாலைகளிலே திரண்டு செல்ல, அரசனோ அல்லது அதிகாரியோ அல்லது விழா நாயகனோ பவனியின் இறுதியிலே ஆரவாரமாக அழைத்து வரப்படுவர். ஆனால் நாம் இப்போது பங்கெடுக்கப்போகின்ற பவனியானது இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. தாவீதின் மகன் என்று போற்றப்பட்ட இயேசு, பவனியின் முன்னால் வழிநடக்க உலகம் அனைத்தையுமே தனக்குப் பின்னால் இழுத்துக்கொண்டும் இயக்கிக்கொண்டும் எருசலேம் நோக்கி முனைந்து விரைகிறார். எனவே குருவானவர் நம் எல்லோரையும் அழைத்தவராக, பாஸ்கா கொண்டாட இழுத்துச் செல்பவராக பவனியின் முன்னால் செல்ல, நாம் அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து, பாடல்களைப் பாடிக்கொண்டும், இயேசுவைப் புகழ்ந்துகொண்டும், அவரது எருசலேம் நுழைவில் பங்கு பெறவும், அங்கு அவரது இறப்பு, உயிர்ப்பு என்ற பாஸ்கா கொண்டாடவும் புறப்பட்டு செல்வோம். 

முதல் வாசகம் முன்னுரை (எசாயா 50,  4-7)

அநீதிகளும், அராஜகங்களும், சுயநலமும் நிறைந்த உலகத்தினை எதிர்த்து போராடுகிறபோது, பல துன்பங்களும் அவமானங்களும், ஏற்படும். பலர் இகழ்வார்கள், ஆனால் தாழ்ச்சியோடும், துணிவோடும் அவைகளை எதிர்த்துப் போராட ஆண்டவர் இயேசு நமக்கு துணையாயிருக்கிறார். அவரை நாடுங்கள் அவர் நம்மை எல்லாச் சூழ்நிலையிலும் வழிநடத்துவார் என்று எசாயாவின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை (பிலி 2, 6-11)

 இயேசு இறைமகன் எல்லாவற்றின் மேலும் அதிகாரமும், வல்லமையும் இருந்தாலும் அன்புகருதி, அமைதி கருதி, சமாதானம் கருதி தன்னையே வெறுமையாக்கினார். தாழ்த்திக்கொண்டார்.  தாழ்ச்சி என்பது வீழ்ச்சி அல்ல. ஆனால் அவரை அனைத்திற்கும் மேலாக உயர்த்தினார். நாமும் நமக்கு அறிவுத்திறமை, ஆள்திறமை, பணம் பதவி இருந்தாலும் பணிவோடு பிறர் வாழ்வு முன்னேற முயற்சி செய்யும்போது கடவுள் நம்மை மேன்மைப்படுத்துவார், என்று கூறும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்:
1. எந்நாளும் எங்களை வழிநடத்தும் அன்பு தெய்வமே! திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரையும் ஆசீர்வதியும், அவர்கள் ஆற்றும் பணி, வாழ்வில் சந்திக்கும் துன்ப துயரங்கள் மற்றும் இடையூறுகள் போன்றவைகளில் உடன் இருந்து அவர்களை  காத்து வழிநடத்தியருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. பாராளும் பரமனே எம் இறைவா!  நாட்டிற்காகவும் நாட்டை ஆளுகின்ற தலைவர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். அவர்களை நிறைவாய் ஆசீர்வதியும்.  அவர்கள் தன்னலத்தோடு வாழாமல், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் தேவைகளை நிறைவேற்றவும், நாடு வளமும், நலமும் பெற அவர்கள் உழைக்கவும், அவர்களுக்கு நல்மனதை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. துன்பமில்லாமல் இன்பம் இல்லை; சிலுவையில்லாமல் சிம்மாசனம் இல்லை என்பதை உணர்த்திய எம் இயேசுவே!  எங்களுக்கு வரும் துன்பத் துயரங்களை தாங்கிக்கொள்ளவும், பிறர் வாழ்வில் உள்ள சுமைகளை  பகிர்ந்து, கொண்டு அவர்களுக்கு உதவி செய்யும் நல் மனதைத் தந்தருள இறைவா உம்மை வேண்டுகிறோம்.
4. இரக்கமுள்ள இறைவா!  புனித வாரத்தில் நுழைகின்ற நாங்கள், உமது பாடுகளையும், இறப்பையும் சிந்தித்து எங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்டு, எங்களுடைய பாவ வாழ்வைக் களையவும், உமது அருளின் துணையால் புதிய சமுதாயத்தை உருவாக்கி உமக்கேற்றவர்களாய் வாழவும் வேண்டிய வரம் அருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குருத்து ஞாயிறு-பாடல்கள்:

 தாவிதின் மகனுக்கு ஓசான்னா  
 ஆயிரக்கணக்கான வருடங்களாய் எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்  
 எபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவ கிளைகள் பிடித்தவராய்   
 கிறிஸ்து அரசே இரட்சகரே மகிமை வணக்கம் புகழ் உமக்கே   
 ஆண்டவர் புனித நகரத்தில் நுழைகையில் எபிரேயர் சிறுவர் குழாம்   
என் இறைவா என் இறைவா ஏன் என்னை (தியானப் பாடல்)

                                          புனித வியாழன்

முன்னுரை

ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள், என்கிறார் ஆண்டவர்.
இயேசுவின் பாஸ்கா விழாவை இன்று கொண்டாடுகின்றோம். பாஸ்கா என்றால் கடத்தல் என்று பொருள் பழைய ஏற்பாட்டில் யாவே கடவுளின் இரக்கத்தினால் பாரவோனின் ஆதிக்கத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் இஸ்ரயேல் மக்கள் செழிப்புமிக்க... வளமையான கானான் தேசத்திற்குக் கொண்டுவரப்பட்டார்கள். அதாவது பாஸ்கா என்ற கடத்தல் நிகழ்வின் வழியாகத் தீமையின் ஆதிக்கத்திலிருந்து கடந்து வந்து இறைவனை பற்றிக்கொண்டனர். ஆனால் இன்று உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்று சொன்ன இயேசு தன்னை உடைத்து தனது உடலையும் இரத்தத்தையும் நம்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக நமக்கு உணவாகத் தருகின்றார். அத்தோடு தன் மீட்புப் பணி இவ்வுலத்தில் தொடர குருத்துவத்தையும் ஏற்படுத்துகின்றார்.
இத்தருணத்தில் இயேசு தன்னல நாட்டமின்றி இந்த மானிடரின் மீட்புக்காக தன்னையே வழங்கியதுபோல நம் அருகில் வாழும் மனிதர்களை அன்பு செய்துவாழவும், மேலும் குருக்கள் ஆண்டினை கொண்டாடும் நாம், குருக்கள் அனைவரும் இயேசு செய்த பணியை மனத்துணிவுடனும், மனித மாண்புடனும் தொடர்ந்து செய்து நீதி, அன்பு சகோதரத்துவம், சமுத்துவம் போன்றவற்றை நிலைநாட்டாவும், இயேசுவை மக்களுக்கு கொடுப்பவர்களாகவும் திகழ வேண்டிய வரத்தை தந்தருள குருக்களுக்காகவும் நமக்காகவும் சிறப்பாக இத்திருப்பலியில் செபிப்போம்.
இன்று புனித வியாழன். இயேசு சிலுவைச் சாவை ஏற்பதற்கு முன் தன்னுடைய சீடருடன் இறுதி உணவு உண்ட, அவர்களின் பாதங்களைக் கழுவித் துடைத்த நிகழ்சி யோடு, இஸ்ராயேல்  மக்களின் விடுதலை வாழ்வின் தொடக்க நிகழ்வும் இன்று நமக்கு நினைவூட்டப்படுகின்றது.
எல்லாவற்றையும் விட மேலாக யேசு தேவநற்கருணையையும், பணிக் குருத்துவத் தையும் ஏற்படுத்தியதையும், தாழ்ச்சி என்னும் தலைசிறந்த பண்பை தன் வாழ்வால் எடுத்தியம்பியதையும் நினைவுகூருகின்றோம். சிறப்பாக இன்றைய திருப்பலியில் அனைத்துக் குருக்களுக்காகவும் மன்றாடுவோம். அத்தோடு திருச்சபையின் பல்வேறு நிலைகளிலும் பணிபுரியும் அனைவரும் கிறிஸ்துவின் மாதிரிகையைப் பின்பற்றி வாழவும், உலகெங்கும் நின்று நிலவும் அடக்குமுறைகள் அழியவும,விடுதலை வாழ்வு நிலைபெறவும்  இறையருள் வேண்டித் தெடரும் திருப்பலியில் இணைவோம்.
இன்றைய திருவழிபாடானது நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.
1.இறைவார்த்தை வழிபாடு
2.பாதம் கழுவும் சடங்கு
3.நற்கருணை வழிபாடு
4.நற்கருணை இடமாற்றம் பவனி.
இந்த வாழிபாட்டு நிகழ்வுகளில் பொருளுணர்ந்து பக்தியோடு பங்கெடுப்போம். வழக்கம் போல திருப்பலி தொடங்கிறது. 12 பேருடன் குருவானவர் பவனியாக பீடம் நோக்கி வருவார்.இன்று உன்னதங்களிலே கீதம் பாடும்போது அனைத்து மணிகளும் ஒலிக்க வேண்டும். இது முதல் பாஸ்கா திருவிழிப்பு வரை மணி ஒலிக்காது.

முதல் வாசகம் முன்னுரை (வி.ப 12, 1-8, 11-14)


இரண்டாம் வாசகம் முன்னுரை (1கொரி 11, 23-26)


நற்செய்தி வாசகம்யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:1-15
 
புனித வியாழன் சிந்தனை:

            
மன்றாட்டுக்கள்.

1. பணியாளர்களை அழைத்து அனுப்பும்  அன்புத் தந்தையே இறைவா! உமது திருமகன் குருத்துவம் என்னும் அருட்சாதனத்தை ஏற்படுத்திய இந்நாளில் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியா,; துறவறத்தார், சிறப்பாக எங்கள் பங்குதந்தை, அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் : பணிக்குருத்துவத்தின் உண்மைப் பண்புகளை உணர்ந்து பணியாற்ற வேண்டிய மகிழ்ச்சியான தருணங்களையும், பலத்தையும் உடல் நலத்தையும், தீமைகளை முறியடிக்க வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்க ளுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2; கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே! உலகிலே பல்வேறு நிலைகளிலும் இருந்து செயற்படும் அனைத்துத் தலைவர்களையும்; உமது கருணையினாலும் , இரக்கத் தினாலும் நிறைத்து அவர்கள் உண்மைத் தலைமைத்துவப் பண்புகளை சரிவரப் புரிந்து கொண்டு செயற்படுவதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3.அன்பு ஆண்டவரே! இன்று அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காகவும்: கவலை, நோய், துன்பம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெற தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக் கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4.அன்புத் தந்தையே இறைவா! உமது திருமகனுடைய திருவுடலாகிய நற்கருணையை அருந்தும் நாங்கள் அனைவரும் அத்திருவுணவை தகுந்த முறையில் உட்கொள்ளவும்:  அத்திருவுணவு குறித்துக்காட்டும் அன்பு, தியாகம், தாழ்ச்சி, தூய்மை, சகோதர உறவு ஆகிய  புனித பண்புகளை எங்கள் வாழ்வாக்கவும், இந்த முத்துபேட்டை தளத் திருச்சபை மகிழ்ச்சியான சாடசிமுள்ள வாழ்வால் தடம் பதிக்க உமது அருள் தந்து எங்களை ஆசீர் வதித்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. அன்பின் இறைவா! நீர் சீடர்களின் பாதங்களை கழுவி அன்பின் முக்கியத்துவத்தை முழுçமாயக எங்களுக்கு உணர்த்தினீர். இதை உணர்ந்து, உமது அன்பின் அடிச்சுவட்டில் நாங்கள் தொடர்ந்து நடக்கவும், எங்களுடைய உள்ளத்தையும், சிந்தனைகளையும் பிறருக்கு அர்பணித்திடவும் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

புனித வியாழன்-பாடல்கள்:

 கிறிஸ்து தம்மை தாழ்த்தி சாவை ஏற்கும் அளவிற்கு (வருகைப் பல்லவி)   
 நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம் (தியானப் பாடல்)   
 புதியதோர் கட்டளை உங்களுக்கு தருகின்றேன் (பாதம் கழுவும் போது)   
 ஆண்டவரே நீரோ என் பாதங்களை கழுவுவது   
 அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன்   
 பாடுவாய் என் நாவே மாண்புமிக்க (நற்கருணை பவனி, ஆராதனை)
  


                                                      புனித வெள்ளி

தயாரிப்பு
1) பீடம் வெறுமையாக இருக்கும்
2) சிவப்பு நிற உடைகள்
3) துணியால் மூடப்பட்ட சிலுவை
4) பீடத்தின் முன் படுக்கை விரிப்பு
தொடக்கச் சடங்குகள்
1) பொது முன்னுரை
2) பவனி
3) முகங்குப்புற விழுந்து செபிக்கிறார்
4) மன்றாட்டு
இறைவாக்கு வழிபாடு
1) முதல் வாசக முன்னுரை
2) முதல் வாசகம் - எசாயா52: 13-53: 12
3) பதிலுரைப்பாடல் - தந்தையே உம்கையில்
4) இரண்டாம் வாசக முன்னுரை
5) இரண்டாம் வாசகம் - எபி 4 :14 -16,5:7-9
6) நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
7) நற்செய்தி வாசகம்
8) மறையுரை
விசுவாசிகளின் மன்றாட்டு
1) முன்னுரை
2) பெரிய மன்றாட்டுகள்
திருச்சிலுவை ஆராதனை
1) முன்னுரை
2) திருச்சிலுவை பவனி (எரியும் திரிகள்)
3) குருக்களும் பீடப்பணியாளரும் ஆராதனை செய்தல்
4) மக்கள் திருச்சிலுவைக்கு ஆராதனை செய்தல்
திருவிருந்து பகுதி
1) முன்னுரை
2) அனைவரும் நின்றுகொண்டிருப்பர்
3) பீடத்தின்மீது துணி விரித்தல்,
4) திருமேனித் துகில்,
5) திருப்பலி புத்தகம் வைக்கப்படும்,
6) நற்கருணை பீடத்திற்கு கொண்டுவருதல்
7) மீட்பரின் கட்டளையால்...
8) திருவிருந்து
9) நன்றி மன்றாட்டு
10) இறுதி செபம்

முன்னுரை.


முதல் வாசக முன்னுரை (எசாயா 52: 13 - 53: 12)

எசாய இறைவாக்கினர் நான்கு இடங்களில் துன்புறும் ஊழியன் என்ற கருத்தில் கவிதை வடிவில் இயேசுவின் பாடுகளை முன்னுரைத்துள்ளார். இயேசு கிறிஸ்து துன்புறும் ஊழியர் என்பதையும், அவர் பாடுகள் பட்டு,  துன்பங்களை ஏற்று எவ்வாறு இவ்வுலகத்தை மீட்க தன்னையே கையளிக்கப் போகிறார் என்பதை முதல் வாசகத்தில் வாசித்து தியானிப்போம்.

பதிலுரைப்பாடல்  திபா: 31: 1,5,12,. 14-16,24

பல்லவி: தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ;

இரண்டாம் வாசக முன்னுரை (எபி 4 : 14 - 16, 5 : 7-9)


நற்செய்தி வாசகம்யோவான் எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள்.; 18:1-19:42

புனித வெள்ளி சிந்தனை:யேசுவின் மரணம், அதன் பிறகு அவரின் உயிர்ப்புக்கு பிறகு, பல நூற்றாண்டுகளாக யேசு நற்செய்தியாளர்களுக்கு, சமய அறிஞர்களுக்கு, 'யார் அவருடைய ஆர்வமான அல்லது அவர் கொடுக்கும் முக்கிய செயலை நினைத்து தியாணிக்கிறார்களோ' அவர்கள் அனைவரும் ஆண்டவரால் விரும்பப்படுபவர்கள். புனித அகுஸ்தினார் இப்ப்டி எழுதியுள்ளார்.' யார் கடவுளின் ஆழ்ந்த விருப்பத்தை தினமும் தியாணம் செயவது, நமது ஆண்மாவிற்கு அதிக லாபம் கொடுக்கும் செயலாகும்'.
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் உருவம், இந்த காலங்களில் நாம் பார்ப்பது, யேசு நம் மீது உள்ள அன்பினால், அவர் அடைந்த கொடூரமான வேதனைகளை நீக்கி விட்டு காட்டப்படும் உருவம். இன்று அந்த அன்பை நினைத்து தியானம் செய். அந்த அன்பு அளவிட முடியாதது, பிரமாண்டமானது. அவர் சந்தோசமாகவும், ஆர்வத்துடனமும் தன்னையே இந்த மிக பெரிய வேதனைக்கு கையளித்து, பல வேதனைகளை அடைந்தார், ஏனெனில், அவர் உன்னை முழுமையாக அன்பு செய்கிறார். அவருக்கு இந்த வேதனை உனக்கு நல்லது செய்யும் என்பது தெரியும்.
இந்த மிக பெரிய அன்பளிப்பு, உனக்கும், எனக்கும் கொடுத்தது, மற்றும் எல்லோருக்கும் , அதனை ஏற்றுகொள்கிறவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இன்றைய நற்செய்தியை படித்து, அதில் ஒவ்வொரு வலிக்கும், காயங்களுக்கும் எவ்வளவு வேதணைபட்டார் என்பதை புர்ந்து கொள், அத்தனை வேதனையும், வலியும், உன் நலனுக்காக கொடுக்கப்பட்டது, உன் பாவங்கள் உன்னை அழிக்காமல் இருப்பதற்காக கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர் உனக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் எவ்வளவு உன்னை பாதுகாக்கிறார் என்பதை புரிந்து கொள்.
யேசுவின் சிலுவையை உற்று நோக்கு அது உன்னை பற்றிய தாழ்வான மதிப்பை குணமாக்கும். ஏனெனில் யேசு எவ்வளவு உயரத்தில் நம்மை தூக்கி வைத்தார் என்பதை இந்த சிலுவை நமக்கு காட்டுக்கிறது. இவ்வளவு உனக்கு இதனை செய்த பின்பு , உனக்கு வேறு தேவையானவற்றை செய்யாமலிருப்பார? அவர் உன் உணமையான் நலம் விரும்பியாக இருந்தால்.? எந்த வேதனை இது மாதிரியான சந்தேகத்தை எழுப்பியது, உன்னைபற்றிய இரக்கமற்ற யோசனை என்ன? நீ உன்னை பற்றி தாழ்வாக எதை நினைத்து கொள்கிறாய். இதனையெல்லாம் சிலுவைக்கு எடுத்து செல், அதனை அந்த வீரர்களிடம் கொடு, அவர்கள் அதனை அந்த ஆணியோடு அறைவதை பார், இந்த காயங்கள் யேசுவோடு மரணமடையட்டும். அவர் இதன் வேதணைகளை உனக்காக அவர் ஏற்கனவே வாங்கிவிட்டார்.
கத்தோலிக்க கோவில்களில், புனித வெள்ளியனன்று, மிக பெரிய மரியாதை செலுத்தும் விதமாக சிலுவையை முத்தம் செய்கிறோம். உஙகளுடைய முத்தம், யேசுவிற்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கட்டும்.
பிறகு, புனித சனியன்று, யேசுவின் கல்லறையோடு சேர்ந்து அமைதியாக ஓய்வெடு. கடவுள் உன் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார், என்பதை நினைத்து அமைதியாக ஓய்வெடு. ஈஸ்டர் ஞாயிறு அன்று உனக்காக மிக பெரிய மீட்பை, உயிர்த்தழுதலை கொடுக்க இருக்கிறார்.
கல்வாரி மலைக்கு இறுதி அடி எடுத்து வை: உன்னை பற்றி தவறாக நினைக்கும் விசயங்களை பட்டியலிடு. உஙகளை ஏளனம் செய்த, அவமானம் செய்தவர்களின் பெயர்களை பட்டியலிடு. உன்னை பற்றி மதிப்பில்லாதவன் என நினைத்த நேரங்களை பட்டியலிடு. உன்னை குறைவாக மதிப்பிட செய்யும் எல்ல விசயங்கலும் பட்டியலிடு. அதற்கு பிறகு, யேசுவின் சிலுவையை பார்த்து அவரின் தியாகம் செய்த அன்பினை நினைத்து தியாணம் செய். அவர் சந்தோசத்தோடும், மிகவும் விருப்பத்துடனும் இந்த வலியையும் வேதனையையும் ஏற்றுக்கொண்டார், ஏனெனில், கடவுள் உங்களை அன்பு செய்கிறார்.இந்த வேதனையும், வலியும் உஙகளை வின்னக அரசுக்கு அழைத்து செல்லும் என்று அவருக்கு தெரியும்.

புனித வெள்ளி-பாடல்கள்: தந்தையே உம் கைகளில் என் ஆவியை ஒப்படைகிறேன் (தியானப் பாடல்)
 திருச்சிலுவை மரமிதோ இதிலேதான் தொங்கியது
 எனது ஜனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் (திருச் சிலுவை வழிபாடு)
 நம்பிக்கை தரும் சிலுவையை நீ மரத்துள் சிறந்த
 தயை செய்வாய் நாதா என் பாவங்களை மீட்டு
 ஆணி கொண்ட உன் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன்

                                               புனித சனி

உயிர்ப்பு- தயாரிப்பு


•கோவிலின் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கும்
•பாத்திரத்தில் தண்ணீர் , புது நெருப்பு
•பாஸ்கா மெழுகுவத்தி
•திருமுழுக்கு பெறுவோர்
பொது முன்னுரை
முதற்பகுதி - ஒளிவழிபாடு
முன்னுரை
வாழ்த்துரை எண்- 8
தீயை ஆசீர்வதித்தல் எண் - 9
முன்னுரை
பாஸ்காதிரியை புனிதப்படுத்துதல் - எண் - 10
புது தீயிலிருந்து திரியை பற்றவைத்தல்
பவனி - கிறிஸ்துவின் ஒளி இதோ
பாஸ்கா திரிக்கு தூபம்
பாஸ்கா புகழுரை
இரண்டாம் பகுதி - இறைவாக்கு வழிபாடு
திரிகள் அனைத்து வைக்கப்படும்
முன்னுரை
முதல் வாசகம் - தொ. நூ 1:1-2:2
பதிலுரைப்பாடல் -1 (ஆண்டவரே உம் பெருமையும்)
செபிப்போமாக - எண் 24
இரண்டாம் வாசகம் - வி.ப. 14:15-15:1
பதிலுரைப்பாடல் -2 (ஆண்டவர் மாண்புடன்)
செபிப்போமாக - எண் 26
மூன்றாம் வாசகம் -  எசேக் 36:16-17, 18-28
பதிலுரைப்பாடல் -3 (கலைமான் நீரோடையை)
செபிப்போமாக - எண் 30
உன்னதங்களிலே (மணிகள் ஒலிக்கும்)
செபிப்போமாக - எண் 32
நான்காம் வாசகம் - உரோ 6:3-11
அல்லேலூயா
 நற்செய்தி - மாற்கு 16:1-7
மறையுரை
மூன்றாம் பகுதி - திருமுழுக்கு வழிபாடு
முன்னுரை
திருமுழுக்கு பெறுவோர் முன்வருதல்
குரு அறிவுரை கூறுதல் - எண் 38
புனிதர்களின் மன்றாட்டுமாலை
திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசிவழங்குதல்-எண் 42, 43
திருமுழுக்கு அளித்தல்
எண் 45 இல்லை
திருமுழுக்கு வாக்குறுதிகளை புதுப்பித்தல் - எண் - 46
தீர்த்தம் தெளித்தல் - தேவாலய வலப்புறமிருந்து
விசுவாசிகளின் மன்றாட்டு - (விசுவாச அறிக்கை இல்லை)
நான்காம் பகுதி - நற்கருணை வழிபாடு
முன்னுரை
காணிக்கை மன்றாட்டு
நற்கருணை மன்றாட்டு -நன்றி மன்றாட்டு- திருப்பலி முடிவு

முன்னுரைஇயேசு கிறிஸ்துவில் பிரியமானவர்களே, இந்நாள் நமக்கெல்லாம் பொன்னாள். மகிழ்ச்சியின் நாள். இன்றைய இரவு வெற்றியின் கொண்டாட்டமாகவும், மகிழ்ச்சியின் ஆரவாரமாகவும் திகழ்கிறது.  திருச்சபையும், நம் விசுவாச வாழ்வும், கிறிஸ்துவின் உயிர்ப்பில் புது பிறப்பையும் புதுத்தெம்பையும் பெறுகிறது. பாஸ்கா என்ற எபிரேய சொல்லுக்கு 'கடத்தல்' அல்லது 'கடந்து போதல்' என்று பொருள். பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள், செங்கடலையும், எகிப்தின் அடிமைத்தனத்தையும் கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு சுதந்திர குடிமக்களாக வந்தார்கள். இயேசுவின் உயிர்ப்பில் பாஸ்கா நமக்கு ஒரு புதிய பொருளைக் கற்றுத் தருகிறது. அதாவது, பாவத்திலிருந்து - புனித வாழ்விற்கும், இருளிலிருந்து ஒளிக்கும், சாவிலிருந்து நிலைவாழ்விற்கும் இயேசுவோடு நாம் கடந்து வருவதைத்தான் இந்த புதிய பாஸ்கா நமக்கு உணர்த்துகிறது. இனியும் நாம் ஊனியல்பிற்கு உட்பட்டவர்கள் அல்ல, மாறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் செயலுக்கு உட்பட்டவர்கள். நாம் இயேசுவின் விலை மதிப்பில்லாத திரு இரத்தத்தினால் மீட்கப்பட்ட மக்களாய், புது வாழ்வு பெற்றவர்களாய் வாழ இன்றைய வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய திருவழிபாடானது நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. 1. ஒளி வழிபாடு 2. இறைவார்த்தை வழிபாடு 3. திருமுழுக்கு வழிபாடு 4. நற்கருணை வழிபாடு ஆகவே இன்றைய இத்திருவழிபாட்டில் பக்தியோடு பங்கு பெறுவோம், பலன் பெறுவோம்.

1. ஒளி வழிபாடு
பொது முன்னுரை

அணுக முடியாத ஒளியில் வாழ்பவர் இறைவன். எனவே சிறியதும் பெரியதுமான ஒளி விளக்குகளால் இறைவனின் பிரசன்னத்தை நாம் உணர முடிகிறது. அன்று இஸ்ராயேல் மக்களை விடுதலை பயணத்தல் ஈடுபடுத்திய இறைவன், மேகத்தூணாகவும் நெருப்புத்தூணாகவும் அவர்களுக்கு முன்னும் பின்னும், இரவும் பகலுமாக நடந்தார். இந்த பாஸ்கா என்னும் கடத்தல் நிகழ்வை நினைவுகூறும் விதமாக இஸ்ராயல் மக்கள் பாஸ்கா விழாவிலே, இரவு நேரங்களில் விளக்கை ஏற்றி, அதை மந்திரித்து, அதன் ஒளியில் திருப்பாடல்களை வாசித்து வந்தனர். புதிய இஸ்ராயேல் மக்களாகிய நாம் ஒளிவிழாவை கிறிஸ்துவின் உயிர்ப்புடன் தொடர்புபடுத்தி இந்த இரவில் கொண்டாடுகிறோம். இப்போது குருவானவர் நம்மை வாழ்த்தி இந்த பாஸ்கா இரவைப்பற்றி அறிரை கூறுவார். (எண். 8)
எண் 8 முடிந்த உடன்)  தீயை ஆசீர்வதித்தல்
புதிய பாஸ்காவின் நினைவாக இப்போது புதுத்தீயை குரு மந்திரிக்கிறார். நெருப்பு தூய்மைபடுத்தும் கருவியாகவும், ஒளியைக் கொடுக்கக் கூடியதாகவும் விளங்குகிறது. திருவழிபாட்டில் நெருப்பு தூபத்திற்கு பயன்படுகிறது. எனவே இந்த நெருப்பை இப்போது குருவானவர் புனிதப்படுத்துகிறார். (எண் 9)
(எண் 10) பாஸ்காத் திரியை மந்திரித்தல்  - இப்போது குருவானவர் பாஸ்கா திரியை புனிதப்படுத்தவிருக்கிறார். பாஸ்காத் திரி கிறிஸ்துவை குறிக்கிறது.
சிலுவை - சிலுவை மரத்தின் வழியாகத்தான் உயிர்ப்பின் மகிமை விளங்குகிறது என்பதைக் குறிக்க இப்போது குருவானவர் பாஸ்கா திரியில்  சிலுவையின் நேர்கோட்டையும் குறுக்குக்கோட்டையும் வரைகிறார்.
அகரமும் னகரமும் - கிறிஸ்து காலங்கள் யாவற்றையும் கடந்து நிற்கிறார் என்பதைக் குறிக்கின்ற வகையில் குருவானவர் பாஸ்கா திரியில் தமிழ் எழுத்துகளின் முதல் எழுத்தான அகரம் என்ற எழுத்தையும் , கடைசி எழுத்தான  ன என்ற எழுத்தையும்,  வரைகிறார்.
ஆண்டின் எண் 2012 - காலங்களும் யூகங்களும், மாட்சியும் ஆட்சியும் ஆண்டவருக்கே உரியன என்பதை குறிக்கும் விதமாக சிலுவையின் நான்கு கோணங்களில் நிகழும் ஆண்டின் எண்களையும் எழுதுகின்றார்.
(எண் 11.) ஆண்டவர் இயேசுவின் தன்னுடைய ஐந்து காயங்களால் நம்மை கண்காணித்து பேணி காக்க வேண்டுமென்று ஐந்து சாம்பிராணி மணிகளை சிலுவையில் பதிக்கிறார்ஐந்து சாம்பிராணி மணிகளை சிலுவையில் பதிக்கிறார்.
பாஸ்கா திரி ஒளியேற்றுதல் (எண் 12) - பாவம் என்னும் இருள் நிறைந்த வாழ்வைத் களைத்துவிட்டு புது வாழ்வு என்னும் ஒளியின் படைக்கலன்களை அணிந்துகொள்ள வேண்டும் என்பதன் அடையாளமாக புனிதப்படுத்தப்பட்ட தீயிலிருந்து பாஸ்காத் திரி பற்ற வைக்கப்படுகிறது. உயிர்த்த இயேசு நம்முடைய மத்தியில் இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.

பாஸ்கா பவனி
முன்னுரை


அன்று இஸ்ராயேல் மக்களை இறைவன் நெருப்புத்தூண் வடிவில் மோயீசன் தலைமையில் வழிநடத்த, செங்கடலை கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குச் சென்றனர். பாஸ்காவின் உண்மையை அதாவது. பாவத்திலிருந்து, நாம் புதுவாழ்வு பெறவும், கிறிஸ்துவின் ஒளியை எல்லா மக்களுக்கும் காட்டி அவர்களையும், ஒளியாகிய இறைவனிடம் கூட்டி வரவும் இந்த பவனி நமக்கு நினைவுப்படுத்துகிறது.
பவனியின் போது, ஒவ்வொரு முறையும் குருவானவர் கிறிஸ்துவின் ஒளி இதோ என்று பாடும்போதும் இறைவா உமக்கு நன்றி என்று அனைவரும் சேர்ந்து பதில் பாடுவோம். கிறிஸ்துவின் உயிர்ப்பு புத்தொளியில் நாமும் பங்கு பெறுவதை குறிக்கும் வண்ணம்
இரண்டாம் முறையாக இறைவா உமக்கு நன்றி என்ற பதில் பாடிய பிறகு நம்மிடம் உள்ள மெழுகு திரிகளை பாஸ்கா திரியிலிருந்து பற்ற வைத்துக் கொள்வோம். மூன்றாம் முறையாக பாடிய பிறகு அனைத்து விளக்குகளும் ஏற்றப்படும்.

பாஸ்கா புகழுரை
மெசியாவாகிய இயேசு ஒளியானவர். இந்த ஒளி திருச்சபையில் இன்று மீட்பின் கருவியாக செயலாற்றுகின்றது. இந்த மீட்பின் வரலாறு இப்போது புகழுரையாக பாடப்படுகிறது. ஆகவே அனைவரும் கைகளில் எரியும் மெழுகுதிரிகளை பிடித்துக்கொண்டு, நின்ற வண்ணம் பக்தியோடு மீட்பின் வரலாற்று உண்மைகளை நமது உள்ளத்தில் ஏற்றுக்கொள்வோம்.

மன்றாட்டுக்கள்.-
1. உயிரளிக்கும் உடனிருப்பே எம் இறைவா!
எம் தாய் திருச்சபையை உம் கையில் அர்ப்பணிக்கிறோம். முழுவிடுதலையை நோக்கி பயணமாகும் திருச்சபை புத்துயிர் பெற்ற புதிய எருசலேம் திருநகராக திகழ்ந்து உலகிற்கு ஒளியாய் திகழவும். திருச்சபை வழிகாட்டிகள் அனைவரும் உம் திருவுளத்தின்படி அன்பையும், நீதியையும் சமாதானத்தையும் இப்புவியில் பரப்பிட எங்களை வழிநடத்த எம் தலைவர்களுக்கு வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்பு இறைவா! எங்கள் ஊரை நிறைவாக ஆசிர்வதியும், அனைவரும் உள்ள உடல் சுகம் பெற்று எங்கள் கடமைகளை சரிவரச் செய்யவும், ஒற்றுமையுடன் தொடர்ந்து வாழவும், செய்கின்ற தொழில்களில் வெற்றி காணவும், எமது பங்கின் வளர்ச்சியில் பங்குத்தந்தையுடன் முழுமையாக ஒத்துழைக்கவும், எடுத்துக்காட்டான மக்களாக வாழ, உமது உயிர்ப்பை எங்கள் வாழ்வில் உயித்து வாழ அருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. உலகின் பேரொளியே இறைவா!
சாவை வென்று வெற்றி வீரராய் நீர் பவனி வந்ததை போன்று, நாங்களும் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் இருக்கவும், சோதனைகளைக் கண்டு கண்ணீர் வடிக்காமல் அவற்றைத் துணிவோடு போராடி வெற்றிகொள்ளவும் வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. உலகின் ஒளியே இறைவா!
பாஸ்கா என்றாலே கடத்தல் என்பதை உணர்ந்து, எங்களது பழைய பாவ இயல்புகளில் இருந்து கடந்து உம் அன்பின் சிறகுகளுக்குள் தஞ்சம் அடையவும், நம்பிக்கை அன்பு, அருள் போன்ற பாஸ்கா விழாவின் கனிகளை நிரம்ப பெற்று வாழ்ந்திடவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5.  உலகின் மீட்பரே எம் இறைவா!
உயிர்ப்பின் பாஸ்கா பலியை கொண்டாடும் உம் பிள்ளைகள் எங்கள் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உமது உயிர்ப்பின் ஒளியால் வளமான எதிர்காலத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்று வாழ்வில் வெற்றி பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.              

1.முதல் வாசக முன்னுரைஇறைவன் அனைத்துலகிற்கும் தலைமை வகிப்பவராக அனைத்தையும் ஆளுபவராக இருக்கிறார். எனவேதான் அவர் அனைத்தையும் படைத்து, இருளை இல்லாமல் செய்து, இறுதியில் மனிதனை தம் சாயலிலே படைத்து அவனை படைப்பின் சிகரமாக்கினார், அவனோடு உறவுகொண்டு வழிநடத்தினார் என்று முதல் வாசகத்தில் வாசிக்க கேட்போம். 

2. இரண்டாம் வாசகம்இறைவன் தொடக்கம் முதல் இஸ்ராயேல் மக்களை பல்வேறு துன்பங்களிலிருந்து காத்தார்.  மோயீசன் தலைமையில் இஸ்ராயேல் மக்கள் செங்கடலைக் கடந்து சென்ற அற்புத நிகழ்வுகளையும், எகிப்தியரை முறியடித்து மக்களைக் காப்பாற்றினார் என்பதை இரண்டாம் வாசகத்தில் வாசிக்க கேட்போம்.

3. மூன்றாம் வாசகம்
இத்தகைய இறைவனின் அன்பையும் அரவணைப்பையும் உணராததால் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட இஸ்ராயேல் மக்கள், தங்கள் பாவத்திலிருந்து மனம்திரும்பி ஆண்டவருக்குள் வருகிறபோது, தூய நீரினால் தூய்மையாக்கி தன்னோடு சேர்த்துக்கொள்வார் என்று மூன்றாம் வாசகத்தில் வாசிக்க கேட்போம்.

4.நான்காம் வாசகம்: ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் மரணத்திலும் உயிர்ப்பிலும் இணைக்கப்பட்டவர்கள் என்ற கருத்தை எடுத்துக் கூறும் புனித பவுல், இயேசு கிறிஸ்துவோடு துன்பப்படுகிறபோதும், நம் திருமுழுக்கினால் பாவத்திற்கு இறக்கிறபோது கிறிஸ்துவோடு உயிர்த்தெழுவோம் என்று கூறுவதை வாசிக்க கேட்போம்.

ஈஸ்டர் ஞாயிறு : யேசுவின் வெற்றி
மறையுரை:


மிகவும் மகிமையுள்ள, யேசுவின் உயிர்த்தெழுந்த நாள்,யேசுவோடு சேரந்து ;இந்த புனித வாரத்தில், நாம் பயணம் செய்யாவிடில், இது நிறைவானதான ஒரு நாளாக இருக்காது. மோட்சத்தின் நுழைவாயில் சிலுவை தான். யேசுவோடு சேர்ந்து, முதலில், வேதனைகளையும், தியாகமும் செய்யாவிடில், நாம் சந்தோசத்தையும், மகிமையையும் அனுபவிக்க முடியாது.
ஈஸ்டர் சந்தோசம், மகிழ்ச்சி யேசுவின் சிலுவையை ஏற்றுக் கொள்வதால் மட்டும் வருவது அல்ல, அந்த பயனத்தை தொடரவேண்டும். நீங்கள், உண்மையாக யேசுவை பின் தொடர விரும்பினால், நாமும் அவர் செய்ததையெல்லாம் செய்து, பிறருக்கு உதவி செய்து, அவர்கள் நித்திய வாழ்வை அடைய யேசுவின் சேவையோடு இனைந்து செய்திடல் வேண்டும். இச்சேவையில், நாம் மீண்டும் மீண்டும் சிலுவையை சந்திப்போம். இத்தகய தியாக அன்பின் வலியில்லாமல், நாம் மோட்சத்தை அடைய முடியாது.
ஒருவர் நம்மிடம் மிக கோபமாக திட்டும்போது, நாமும் அவர்களை திட்ட வேண்டும் என தோன்றும்.ஆனால், நாம் மென்மையான, மிகவும் கருணையுடன் பேசுவது, நமது சிலுவையாகும். ஒருவரி தொந்தரவில் இருக்கும்போது, நமக்கு வசதியின்றி, நாம் ஈடுபட வேண்டாம் என நினைக்கும் அள்விற்கு வரும்போது, நமது இரு கைகளாலும், அவர்களுக்கு தேற்றுதல் கூறும் போது, நமக்கு சிலுவையாகும். நம்மை அநியாயமாக நடத்துபவர்களுக்கு, நம்மை பழி வாங்குபவர்களுக்கு நல்ல செயல் செய்வது ஒரு சிலுவையாகும். இறைவனின் விண்ணக அரசுக்காக, நாம் நமது வாழ்க்கையை வேறுபடுத்தி வாழும்போது, நமக்கு மீட்பின் சந்தோசம் கிடைக்கிறது.
கடினமான நேரத்தில் கொடுக்கும் அன்பு, வேதனையின் அன்பு, ஆழமான அன்பு, இது மற்றவர்களின் நித்திய வாழ்விற்கு உதவியாக இருக்கும். நம் தியாகம், முடிவில்லா மதிப்பை தரும். இது நமக்கு நாமே செய்து கொள்ளும் வாழ்வினை விட மிக சிறந்த வாழ்க்கையாகும். நித்திய வாழ்விற்கும் மிக சிறந்தாகும். ஈஸ்டர் ஞாயிறன்று, யேசுவின் உயிர்ப்பில் நாம் கலந்துகொள்ளும் திருப்பலி, சாத்தான் மீது பெற்ற வெற்றியாகும்.
சுய சிந்தனைக்கான கேள்வி: எந்த மாதிரியான தியாகங்களால், நீ இப்போது வேதனை படுகிறாய்? யேசுவிற்கு ஒரு அன்பு கடிதம் எழுது. அக்கடிதத்தில், உனது வலியையும், அவரது வலியையும் இனைத்து அவரோடு அமைதியாக அவர் கல்லறையில் அவரோடு சேர்ந்து இரு, நீ எப்போது தயாராக இருக்கிறாயோ? அப்போது, எழுந்து யேசு, உன் செயல்களை பாராட்டுகிறார் என்று அறிந்து அப்போது கொண்டாடு. இது தான் உனது மீட்பு.




 
இயேசுவை நித்திய தலைமை குருவாக படம்பிடித்துக்காட்டி அவர் எவ்வாறு பழைய ஏற்பாடடின் குருக்களிலிருந்து மாறுபட்டவராக இருக்கின்றார் என்பதையும், பழைய ஏற்பாட்டின் பலிபொருட்கள் குறையுடையதாய் இருக்கும்போது, புதிய பலிப் பொருளாகிய இயேசு எப்படி குறைவில்லாத செம்மறியாக இருக்கிறார் என்பதையும் விளக்கும் இரண்டாம் வாசகத்திற்கு செவிகொடுப்போம்.
அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப் பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்: அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள்.
இன்று புனித வெள்ளி;. இயேசு நமக்காகச் சிலுவைச் சாவை ஏற்று உயிர்விட்ட நாள், நாம் வாழ்வுபெற தம் வாழ்வையே கொடுத்த நாள். நமது துரோகத்தனங்களுக்காக அவமானத்தையும், வேதனைகளையும், அனுபவித்த நாள். நம் குற்றங்களுக்காகக் காயமடைந்த நாள், நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்ட நாள், நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்ட நாள். இதனை நாம் சிறிதுதளவேனும் உள்ளாந்த உணர்வோடு சிந்திப்போமா.
ஏதற்காக நாம் இங்கே ஒன்று கூடியுள்ளோம்.
•வரலாற்றைத் திரும்பிப் பார்த்து வெறுமனே அதை நினைத்துப்பார்த்து யாரோ குற்றமிழைத்துள்ளார்கள், இயேசு பாடுபட்டு, மரித்து, அடக்கம் செய்யப்பட்டார் என்று நினைத்து சில சடங்குகளைச் செய்யவா?
•சமுதாயத்தோடு சங்கமமாகும் அவலங்களுக்கும், அழுகுரல்களுக்கும் - சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் நான் எப்படிக் காரணமாகிறேன் ? இயேசுவின் பாடுகளுக்கு நான் செய்த பங்களிப்பு என்ன என்னும் சுயமான ஒரு ஆய்வுக்காகவா? சிந்திப்போம்.
இன்றைய வழிபாடு பின்வரும் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது.
                  •இறைவாக்கு வழிபாடு.
                  •திருச்சிலுவை ஆராதனை.
                   •திருவிருந்து.
இப்பொழுது அனைவரும் அமைதியாக எழுந்து நின்று இன்றைய வழிபாட்டை ஆரம்பிப்போம்.
யேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு பனிவிடை பெறுவதற்கு அல்ல. அவருக்கு அந்த தகுதி இருந்தாலும், அவர் பனி செய்யவே வந்தார். உனக்காக பனி ஃ சேவை செய்ய வந்தார். மற்றும் உன் மூலமாக, நீ உனக்கு தெரிந்தவர்களுக்கு பனி செய்ய வேண்டும் என்று விரும்பிகிறார்.
நம்மை அழைத்து, நமக்கு பனிவிடை செய்த நம் கடவுள், நம்மை நோக்கி, 'நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன். ' என்கிறார்.
இது மாதிரி யேசு செய்தது போல, நாமும் செய்வது மிகவும் கடினமானது. இது மாதிரி செய்ய வேண்டும் என்றால், நமது சகோதரர்களையும், நாம் விரும்பாதவர்களையும் அதிகமாக அன்பு செய்து அவர்களுக்கு நல்ல செயல்கள் செய்து கடவுளை போல இருக்க முயற்சிக்க வேண்டும். வேறு விதமாக சொன்னால், நமக்கு நெருக்கமானவர்கள், நமக்கு நாம் விரும்புவது போல் செய்யாவிட்டால், நமக்கு ஏமாற்றம் அடையும் போது, நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து அவர்களுக்கு நன்மையாக இருக்க வேண்டும்.
'நாம் நனமையாக' இருக்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம். நாம் யேசுவின் உடலையும், இரத்தத்தையும் பெற்று, அவரோடு இனைந்து, இந்த திருச்சபையோடும் இனைய வேண்டும். நாம் கிறிஸ்துவை பெறுவதற்காக நாம் நற்கருணையை நோக்கி தனியாளாய் செல்கிறோம், அப்போது நாம் சொல்வது ' ஆண்டவரே உன்னை பெற நான் தகுதியற்றவன்.. ' . ஆனால், நற்கருணையை பெற்ற பின் கிறிஸ்துவின் உடலனி ஒரு உறுப்பினராகி, அவரோடு ஒன்றாய் இனைந்து விட்டோம். கிறிஸ்துவின் உடலின் ஒர் அங்கமாகி, நாமும் ரொட்டியும் , திராட்சை ரசமும் ஆக மாறிவிட்டோம். திருப்பலி முடிந்தவுடன், நாமும் நன்மையாக இருக்க அழைக்கப்படுகிறோம் - உண்மையான கிறிஸ்துவின் பிரசன்னமாக இவ்வுலகில் இருக்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, யேசு எனக்கு இந்த கருத்தினை அறிவுறுத்தினார். குரு ஒருவர்க்கு காலை கழுவி விடுவது போல ஒரு நிகழ்ச்சி நடந்தது. அவர் எங்கள் பங்கு உறுப்பினர்களுக்கும், எங்களுக்கும் , அதிகம் குடித்தும், காமப் பார்வை பார்த்தும், எங்களுக்கு துரோகம் செய்தார். அவருடைய பாதஙல், மிகவும் மோசமாக இருந்தது, அதைவிட மோசமானது, 'அவருடைய பாவங்களை ஒத்துகொள்ளாதது'.
'காலை கழுவுவதால்' எது நிறைவேற்றப்படுகிறது அல்லது எது பூர்த்தி செய்யப்படுகிறது. இது கருணையின் அடிப்படையாக அமைகிறது. அந்த குருவானவருக்கு நான் செய்தது , அவருக்கு பனிவிடை செய்ய விரும்புகிறேன், அவர் இந்த செயல், அவர் பாவஙகளின் குணப்படுத்தும் செயலாக நினைத்து , அதற்கு உட்படுத்த வேண்டும். அவர் அதனை ஏற்று கொள்ளவில்லை. அதனால் அவரை பற்றி, நிர்வாகத்தினரிடம் புகார் செய்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சி, எனக்கு பெரிய மாற்றமாயிர்ந்தது. என்னுடைய நிபந்தனையில்லாமால் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டியதன் விருப்பத்தை என்னுள் மாற்றியது. யேசு என் காலையும் , எனது இதயத்தையும் சேர்த்து கழுவினார். இந்த நிகழ்ச்சி யேசுவின் ஆழ்ந்த அன்பை என்னால் புர்ந்து கொள்ள முடிந்தது.
கலவாரி மலைக்கு யேசுவோடு சேர்ந்து அடியெடுத்து வை: மனதுக்கு இணிய செயலாக இல்லாவிட்டாலும், மற்றவர்களுக்கு நல்லது செய்ய முற்படவேண்டும். முதலில் ஏன் யேசு உங்களின் கால்களை கழுவினார் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்று சிறிது நேரம், யேசு உஙகள் காலை கழுவுவது போல் நினைத்து கொள்ளுஙகள். உஙகள் முன் முழஙகாலிட்டு உஙகள் கால்களின் அழுக்குகளை மென்மையாக துடைந்து கழுவது போல் கற்பனை செய்து கொள்ளுங்கல். அப்புறமாக புந்த வியாழன் திருச்சடங்குகளில், 'யேசு என்னை எந்த மாதிரி பனி விடை செய்ய அழைக்கிறார்' என்ற கேள்வியுடன் கலந்து கொள்ளுஙகள
அர்த்தமற்ற வழிபாடுகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. வழிபாடுகள் வாழ்வாகும்போதுதான் வாழ்வில் மாற்றம் பிறக்கிறது. வாழ்வு சிறக்கிறது. எனவே திருப்பலியின் போது இயேசுவின் உடலை உண்டு அவரது இரத்தததைப் பருகுவது என்பது வெற்றுச் சடங்காக மாறிவிடாமல் நாம் அன்றாட வாழ்வில் இறையரசை வாழ்வாக்க வேண்டும் என்ற புனித பவுலின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.
பாஸ்கா என்றால் கடந்து செல்லுதல் என்று பொருள். தங்கள் சொந்த நாட்டை விட்டு, எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்த தம் மக்களை கடவுள் விடுவித்து, கானான் தேசத்திற்குக் கொண்டு வந்தார். அந்த நிகழ்வுதான் பாஸ்கா, நாமும் பாவத்திலிருந்து விடுபட்டு இறைவனோடு இணைய நம் பழைய நிலையிலிருந்து கடந்துவர நம்மை அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
பதிலுரைப்பாடல்  திபா: 116: 12-13. 15-18பல்லவி: கடவுளைப் போற்றித்; கிண்ணத்தில் பருகுதல்,  கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுவதே.

1 comment:

  1. Merit Casino Review, Bonuses and Payments - Curacao
    Learn about Merit Casino and 온카지노 play for real money with Curacao casino bonus codes and the 샌즈카지노 best offers from Curacao casino sites! 메리트 카지노

    ReplyDelete